பேராசியரியர் நிர்மலா தேவி சிறையில் உயிருக்கு ஆபத்து !வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

பேராசியரியர் நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை செல்பேசியில் தொடர்புகொண்டு, பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி தூண்டியதாகவும், குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு,மதுரை சிறையிலடைக்கப்பட்டுள்ளார். மதுரை மத்திய சிறை வளாகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் சிறைச்சாலையில் தனது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாக, பேராசிரியர் நிர்மலா தேவி தம்மிடம் தெரிவித்துள்ளதாக  கூறினார். மேலும் தான் பேசிய ஆடியோ  எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என பேராசிரியர் நிர்மலா தேவி கூறியதாக, அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதற்கிடையே,  நிர்மலா தேவி விவகாரம் பற்றி விசாரிக்க, ஆளுநரால் நியமிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் வியாழக்கிழமை தனது விசாரணையைத் தொடங்குகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment