பேட்ட படத்தில் விஜய் சேதுபதியை அடுத்து முக்கிய கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியீடு!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இபபடத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தினை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு தீவிர முயற்சி செய்து வருகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கேரக்டர் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நவாஸுதீன் சித்திக் கதாப்பாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் இவரது பெயர் சின்கார்சிங் என குறிப்பிடப்பட்டுள்ளது.
source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment