பெல்ஜியம் அரசு நீரவ் மோடியின் 2 வங்கிக் கணக்குகளை முடக்கியது …!

பெல்ஜியம் அரசு  பஞ்சாப் நேசனல் வங்கி நிதிமோசடி வழக்கில் தொடர்புடைய வைர வணிகர் நீரவ் மோடியின் 2 வங்கிக் கணக்குகளைப் முடக்கியுள்ளது.

பஞ்சாப் நேசனல் வங்கியின் உத்தரவாதக் கடிதத்தின் மூலம் பல்வேறு வங்கிகளில் 11ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் கடன்பெற்றுத் திருப்பிச் செலுத்தாத வைர வணிகர்கள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்தியாவில் அவர்களின் நிறுவனங்களிலும் வீடுகளிலும் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன் ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் அமலாக்கத்துறையினர் வேண்டுகோளை ஏற்று நீரவ் மோடியின் இரண்டு வங்கிக் கணக்குகளைப் பெல்ஜியம் அரசு முடக்கியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment