கேரள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லாமல் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு அளித்ததன் பெயரில் கேரளா அரசு பெண்களுக்கு ஐயப்பன் கோவிலில் உரிய வசதிகள் , பாதுகாப்புகள் வழங்கப்படும் என்றது.

இது கேரளாவில் பெரிய போராட்டத்தை உண்டாக்கியது.இந்து அமைப்புகள் மற்றும் பெண்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து போராடினர்.இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசாருக்கும் , போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் இன்று 144 தடை உத்தரவு என அரசு தீர்ப்பை அமுல்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து வருகிறது.

இது குறித்து இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் , ஐய்யப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அங்கு பெண்பாடு முக்கியமில்லை பழக்கப்பட்டு வரும் பண்பாடுதான் முக்கியம் .இது மூடநம்பிக்கையல்ல.முடிவான நம்பிக்கை.இது தீர்க்கக்கூடிய.நம்பிக்கையல்ல.தீர்க்கமான தீவிரமான நம்பிக்கை என்று டிவீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

DINASUVADU