பெண்களுக்கு உடைக்கட்டுப்பாடு…பாக். பிரதமர் உத்தரவு…!!

பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி போட்டியிட்டது. அப்போது தேர்தல் பிரசாரம் செய்த இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றால் ‘நவீன பாகிஸ்தானை உருவாக்குவேன். சர்வாதிகாரத்தை ஒழிப்பேன்’ என்றார். ஆனால் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பின் அதற்கு நேர்மாறான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் தலைமை செயலகம் உள்ளது. ’அங்கு நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அலுவல் காரணமாக சித்ராபட் என்ற பெண் லாகூரில் உள்ள தலைமை செயலகம் சென்றார். அவர் தலையில் முக்காடு மற்றும் துப்பட்டா அணியாமல் சென்று இருந்தார்.
அதைப் பார்த்த அலுவலக காவலாளிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். முக்காடு அல்லது துப்பட்டா இல்லாமல் பெண்களை உள்ளே நுழைய விடக்கூடாது என பஞ்சாப் சுகாதார நல மந்திரி டாக்டர் ரஷித் உத்தர விட்டுள்ளதாக கூறினார்.
அந்த உத்தரவை காட்டும் படி சித்ராபட் அவருடன் வாக்குவாதம் செய்தார். அதற்கு அவர் வாய்வழி உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இத்தகவலை சித்ராபட் டுவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதுதான் இம் ரான்கானின் நவீன பாகிஸ்தானா? சர்வாதிகாரம் ஒழிப்பா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 15 ஆன்டுகளுக்கும் மேலாக நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சியில் இருந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்து இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment