பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு நினைத்தால் குறைக்கலாம்!பாஜக தலைவர் தமிழிசை

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்தால் விலை நிச்சயம் குறையும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.அதேபோல்  ஜிஎஸ்டியின் கீழ் பொருட்கள் கொண்டுவரப்பட்டதால் மாநில அரசின் வருவாய் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என தேர்தல் அறிக்கையில் கூறிய குமாரசாமியின் பதவியேற்பில் ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்பாரா? என்றும்  தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு  முன் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் மாநில வருவாய் பாதிக்கப்படும் என்று கூறினார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை:

இன்றைய பெட்ரோல், டீசல் விலை பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.79.79 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 28 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.71.87 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment