பெங்காலி படத்தில் அனுமோல்…!!!

பிரபல மலையாள நடிகை அனுமோல். கண்ணுக்குள் என்ற தமிழ் படத்தில் தான் அறிமுகமானார். அதன்பிறகு ராமர் என்ற படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சூரன், திலகர், ஒருநாள் இரவில் படங்களில் நடித்தார். ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.

அனுமோல், தற்போது பெண்களை படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஒபிமானி ஜோல் என்ற டைட்டிலை கொண்ட இந்தப்படத்தை ஜோஸ் ஜோஷி ஜோசப் என்ற மலையாள இயக்குனர் இயக்குகிறார். கணவன், மனைவி, மகன் ஆகிய மூவருக்கு இடையிலான உணர்வுபூர்வமான கதை. இதற்காக பெங்காலி மொழியை கற்றுக் கொண்டு நடித்து வருகிறார் அனுமோல்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment