வெகு சிறப்பாக நடந்த புனித பெரிய அந்தோணியார் பெருவிழா..!!

வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் தேவாலயம் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழாவானது  நடந்தது. இதையொட்டி ஆலயம் சார்பாக நேற்று புனிதர்களின் பெரிய தேர் பவனியும் நடந்தது.

இதற்கு முன் கடந்த 16 தேதி மாலை வாண வேடிக்கையுடன் மதுரை உயர் மறைவட்ட பேராயர் அந்தோணி பாப்புச்சாமி தலைமையில் புனிதரின் ஆடம்பரக் கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழாவானது தொடங்கியது.

Image result for அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா

இதனை தொடர்ந்து 5 மின்ரத பவனி விசுவாச வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் பவனி தேவாலயத்தை சுற்றி வந்து. பின் மாலை புனித பெரிய அந்தோணியார் மற்றும்  அன்னை வேளாங்கண்ணி,புனித ராயப்பர், சிறிய அந்தோணியார் மற்றும்  புனித வானதூதர் ஆகிய புனிதர்களின் சிலைகளுடன் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய தேர்களில் பவனி வரும் நிகழ்ச்சியானது வெகு சிறப்பாக நடந்தது.

இத்தேர் பவனி விழாவில் திண்டுக்கல், மதுரை , தேனி,  திருச்சி, சென்னை மற்றும் கேரளா உள்பட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

author avatar
kavitha

Leave a Comment