புதிய 2000 ரூபாய் நோட்டை வைத்திருந்தால் நோய் பரவும் ..?அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி: புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டால் தொற்றுநோய் பரவுவதாவதாக திடீர் சந்தேகம் எழுந்துள்ளது.

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு புகார் மனுவானது மத்திய அமைச்சர்கள் மட்டும் நிர்வாக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது அதில் கூறப்பட்டு இருப்பதாவது ,

மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு பயன்பாட்டில் இருந்து வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.இது மாநிலம் முழுவதும் மிப்பெரிய அதிர்வை உண்டாக்கியது.

இந்த நிலையில் அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது.இப்படி அரசு அறிமுகம் செய்த புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டால் தொற்றுநோய் பரவுவதாவதாக திடீர் சந்தேகம் எழுந்துள்ளது…

இந்நிலையில் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்படட ஒரு புகார் மனுவில் இந்த புதிய ரூபாய் நோட்டுகள் எளிதாக நோய் காரணிகளும், அழுக்குகளும் பரவும் வகையில் உள்ளது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.நோய் தொற்று இதனால் காய்ச்சல் தொடங்கி நிறைய தோற்று நோய்கள் பரவுவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து மத்திய அரசிடம் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் இதுகுறித்து புகார் மனு அளித்துள்ளது…

ஏற்கனவே மத்திய அரசு அறிமுகம் செய்த  புதிய ரூபாய் நோட்டுகளுக்கு எதிராக நிறைய புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டுகளில் 200 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க முடியவில்லை. மிக எளிதாக கள்ளநோட்டு அடிக்கப்படுகிறது. இதில் போதிய பாதுகாப்பின் வசதிகள் இல்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

 

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment