பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 6 தீர்த்த குளங்கள் இடமாற்றம்..!!

பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 6 தீர்த்த குளங்கள் இடமாற்றம்..!!

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 6 தீர்த்த குளங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அதில் பக்தர்கள் புனித நீராடும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
Related image
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி பயன்பாட்டின் இல்லாமல் இருந்த 6 தீர்த்த குளங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று 6 தீர்த்த குளங்களும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மொத்தம் 22 தீர்த்த குளங்கள் உள்ளது.
Image result for ராமேஸ்வரம் ராமநாதசுவாமி
ஆனால் அமாவாசை மற்றும் இதர நாட்களில் பக்தர்கள் வருகை அதிகம் இருப்பதாக காரணம் காட்டப்பட்டு அமாவாசை வரும் நாட்களில் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் உள்ள 6 குளங்களை கோயில் நிர்வாகத்தினர் பூட்டி வைத்துவிடுவதாகவும் அவற்றில் எங்களால் நீராட முடியாமல் போவதாக  பக்தர்கள் தங்களின் புகார் தெரிவித்தனர்.
Image result for ராமேஸ்வரம் ராமநாதசுவாமி
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை பயன்பாட்டிற்கு வராத 6 தீர்த்த குளங்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டது.இந்த உத்தரவின் படி  6 குளங்களும் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் வேறு இடத்துக்கு மாற்றி கோயில் நிர்வாகம் அமைத்ததுள்ளது.இதனால் இனி பக்தர்கள் 22 தீர்த்த குளங்களிலும் நீராட வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *