பினிஷிங்னாலும் இவருதான் …! விக்கெட் கீப்பங்கிலும் இவருதான் …!இவருடன் யாரையும் ஒப்பிட வேண்டாம் …!

மகேந்திர சிங்க் தோனி ‘கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ‘பினிஷிங்’ செய்துள்ளார். தினேஷ் கார்த்தியை இவருடன் ஒப்பிட வேண்டாம்,” என, ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்தார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி. இரு உலக கோப்பை (2007, 2011) வென்று தந்தவர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்த ‘பினிஷர்’ என்ற பெயர் பெற்றவர். இதனிடையே, சமீபத்தில் நடந்த முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடர் பைனலில் (எதிர்-வங்கதேசம்), இந்தியாவின் தினேஷ் கார்த்திக், கடைசி பந்தில் சிக்சர் அடித்து, கோப்பை வென்று தந்தார்.

இதையடுத்து, பலரும் தோனி-தினேஷ் கார்த்திக்கை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியது:

தினேஷ் கார்த்திக் சிறப்பான திறமை படைத்தவர். இந்திய அணியில் இடம் பெற கடுமையான போட்டி நிலவினாலும், தனது திறமையால் தொடர்ந்து 13 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் நீடித்து வருகிறார். தோனி தொடர்ந்து சாதித்து வருவதால், துரதிருஷ்டவசமாக தனக்கான இடத்தை தினேஷ் கார்த்திக் பிடிக்க முடியாமல் போனது.

இருப்பினும், இவரிடம் திறமை உள்ளது. இன்னும் பல்வேறு திறமைகளை வெ ளிப்படுத்த காத்திருக்கிறார். சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார். திறமை அடிப்படையில் இப்போதுள்ள விக்கெட் கீப்பர்களில் தோனிக்கு அடுத்து, இவர் தான் ‘டாப்’.

 அதேநேரம், என்னைப் பொறுத்தவரையில், முத்தரப்பு தொடர் பைனலில், இவர், 8 பந்தில் 29 ரன்கள் எடுத்திருக்கவில்லை என்றாலும், அவரது திறமை குறைவானவர் என்று ஆகிவிடாது. இந்த ஒரு போட்டியில் இவர் ‘பினிஷிங்’ செய்ததை வைத்து, தோனியுடன் ஒப்பிட்டு பேசுவதை ஏற்க முடியாது.

ஏனெனில், கடந்த பத்து ஆண்டுகளாக இதைத் தான் செய்து வருகிறார் தோனி. இவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. தவிர, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் திறமை, பண்புகள் இருக்கும். இதை மற்றவர்களுடன் ஒப்பிட்டு கூறக்கூடாது.இவ்வாறு நெஹ்ரா கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment