பாகிஸ்தானுக்கு நிதி வழங்க அமெரிக்கா மறுப்பு…!!

பயங்கரவாதத்தை தடுக்கவில்லை என்று பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 11 ஆயிரத்து 950 கோடி ரூபாய் நிதியை அமெரிக்கா வழங்க மறுத்துள்ளது.

உலகளாவிய பயங்கரவாதத்துக்கான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தானும் உள்ளது. இதற்காக அமெரிக்கா,பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்குகிறது. ஆனால் பாகிஸ்தானில் இயங்கி வரும் லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, ஹக்கானி நெட்வொர்க் போன்ற அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்குவதில் இருந்து பாகிஸ்தான் தவறிவிட்டதாக அமெரிக்கா கூறி வந்தது.

இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக நிதி இனி வழங்கப்படமாட்டாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இருந்திருந்தும் தகவல் தெரிவிக்காத பாகிஸ்தானுக்கு நிதி வழங்க கூடாது என முன்னரே தான் முடிவு செய்திருந்ததாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment