பள்ளி மாணவி கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் நழுவி சென்ற ராகுல் காந்தி !

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி , அமேதியில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது மாநில அரசின் கடமை என்றும், நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுவதே எம்.பி.யாக தனது கடமை என்றும் பள்ளி மாணவர்களிடம் பதில் அளித்துவிட்டு நழுவிச் சென்றார்.

தனது சொந்த தொகுதியான அமேதியில் பள்ளி மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாடினார். அப்போது, அரசு பல்வேறு சட்டங்களை இயற்றிய போதும், எதுவும் தங்கள் கிராமத்தை வந்தடைவதில்லையே என மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, இந்த கேள்வியை பிரதமர் நரேந்திரமோடியிடம் தான் கேட்க வேண்டும் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது இந்த கேள்வியை தம்மிடம் எழுப்பலாம் என்றும் கூறியுள்ளார். அதே  மாணவி அமேதி தொகுதியில் ராகுல் அமல்படுத்திய திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு திட்டங்களை அமல்படுத்த முடியாது  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என்றும் தான் சட்டம் மட்டுமே இயற்ற முடியும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக நழுவிச் சென்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment