பல்கேரியாவின் வினோத கடைகள்!

 அதிக வாடகை கொடுத்து கட்டிடங்களில் கடை வைக்க இயலாதவர்களே பெரும்பாலும் தெருவோரக் கடைக்காரர்களாக இருக்கிறார்கள்.உலகம் முழுவதும் தெருவோரக் கடைகள் இருக்கின்றன.ஆனால் பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் இருக்கும் தெருவோரக் கடைகள் சற்று வித்தியாசமானவை.
இந்நிலையில் இந்தக் கடைகள் அனைத்தும் மினியேச்சர் கடைகளாக முழங்காலுக்குக் கீழே இருக்கின்றன. பல்கேரியாவில் கம்யூனிச அரசாங்கம் வீழ்ந்த பிறகு புதிதாக உருவான தொழில்முனைவோர்கள். இவர்கள் கடைகளின் வாடகை, கட்டுப் படியாகாததால் மினியேச்சர் கடைகளை உருவாக்கிக் கொண்டனர்.
இந்த கடையில் உள்ள பொருட்கள் கண்ணாடி அலமாரிகளில் வெளியில் தெரியும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. என்ன வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டு, வாடிக்கையாளர்கள் குனிந்து சிறிய ஜன்னல் வழியே கடைக்காரரிடம் பொருட்களைக் கேட்டு வாங்க வேண்டும்.
மேலும் மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகள் இரவில்தான் திறக்கப்படுகின்றன. மற்ற கடைகள் 24 மணி நேரமும் திறந் திருக்கின்றன. தற்போது இந்தக் கடைகள் மெதுவாக மறைந்து வருகின்றன.
இருப்பினும் ஆங்காங்கு இருக்கும் ஒருசில மினியேச்சர் கடைகளை பல்கேரியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசிக்கிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு தின்ச்சுவடுடன் இணைந்திருங்கள்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment