பகையாளிகள் பங்காளிகளான சம்பவம்.. அமெரிக்கா-சீனா இடையே புதிய ஒப்பந்தம்.. முடிவுக்கு வந்தது வர்த்தகப்போர்..

  • ஒருவருக்கு ஒருவர் போட்டியாக  நிகழ்த்தி வந்த வர்த்தக போரை  அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் தற்போது பரஸ்பரம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்குகொண்டு வந்துள்ளன.
  • உலக அரசியலில் புதிய திருப்பம்

சீனாவுக்கும் , அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக கடும் மோதல்கள்  நிலவி  வந்தது. இதில், கடந்தாண்டு ஜூன் மாதத்தில்  ஜப்பானின் ஒசாகாவில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும்  சீன அதிபர் ஷி ஜிங்பிங் ஆகியோர்  இடையிலான சந்திப்பின் போது, சீன பொருட்களுக்கு புதிதாக வரி விதிப்பதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஒப்பு கொண்டது. இதையடுத்து இந்த இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்வதென முடிவு செய்தன.இந்நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.

Image result for america china trade war agreement

இந்த ஒப்பந்தம்  அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த  ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மற்றும்  சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வர்த்தக போரை நடத்தி வந்த பொருளாதார வல்லரசுகளான அமெரிக்க மற்றும் சீன நாடுகள் இன்று முதற்கட்டமாக  ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. இதையடுத்து இந்த இரு நாடுகளுக்கிடையேயான உறவு மீண்டும்  புதிதாக துளிர்க்கும் என உலக மக்கள் கருதுகின்றனர்.

author avatar
Kaliraj