பகிர் தகவல் ” குட்கா ஊழல் நடந்தது உண்மை” ஜார்ஜ் விளக்கம்..!!

குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்… ஆனால்?’ – முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் நேற்று முன்தினம்  35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக இந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குட்கா வழக்கில் சுதந்திரமான அமைப்பின் விசாரணை கோரி தி.மு.க எம்.எல்.ஏ., அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், குட்கா வியாபாரிகள் சென்னை மாநகர ஆணையருக்கு 21.4.2016, 20.5.2016, 20.6.2016 ஆகிய தேதிகளில் லஞ்சம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த நேரத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். சென்னை ஆணையர் பதவியிலிருந்து 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி நீக்கப்பட்ட நான், அந்தப் பதவிக்கு மீண்டும் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதிதான் நியமிக்கப்பட்டேன். அந்த குறிப்பிட்ட தேதிகளில் நான் சென்னை மாநகரக் காவல் ஆணையர் பதவியில் இல்லை.
சிபிஐ பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் 18-வது பாராவில், மேற்கூறிய தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, தி.மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சனோ அல்லது அவர்கள் தரப்பில் தாக்கல்செய்துள்ள மனுவில், எந்த ஓர் இடத்திலும் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை.

சென்னை மாநகரக் காவல் ஆணையராக நான் 2016-ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் நியமிக்கப்பட்டபோது, குட்கா ஊழல் தொடர்பாக கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்குத் தொடர்பிருப்பதாக ஒரு வதந்தி, சமூக வலைதளங்கள் வெளியானது. கமிஷனராக நான் பொறுப்பேற்ற பிறகு, இதுபோன்ற ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வருவதுகுறித்து நான் அறிந்திருந்தேன். கமிஷனர் அந்தஸ்து அதிகாரிகள்மீது குற்றம் சாட்டப்படுவதால், சென்னை கமிஷனராக இருந்த நான் விசாரணைக்கு உத்தரவிடுவது முறையற்றது என நான் எண்ணினேன். அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்த விவகாரம்குறித்து அந்தச் சமயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, குட்கா விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, தமிழக அரசுக்கு நான் கடிதம் எழுதினேன். இது அனைவருக்கும் தெரியும்.
ஜார்ஜ்

அந்தக் கடிதம் எழுதுவதற்கு முன்பாக முதற்கட்ட விசாரணையை நான் நடத்தினேன். அப்போது, உளவுத்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றிக்கொண்டிருந்த விமலாவை அழைத்து விசாரித்தேன். மாதவரம் பகுதியில் நீண்டநாள்களாக துணை ஆணையராகப் பணியாற்றியவர் என்கிற முறையில் அவரிடம் குட்கா விவகாரம்குறித்துக் கேட்டேன். செங்குன்றம் பகுதியில் இருந்த குடோனில் நடத்திய சோதனையில், குட்கா பொருள்கள் இல்லை என்று எனக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. நான் நடத்திய முதற்கட்ட விசாரணையில், துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு இந்த விவகாரம் தொடர்பாக போனில் தகவல் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் இதைப் பொருட்படுத்தவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்துதான் உரிய விசாரணை நடத்துமாறு தமிழக அரசுக்கு நான் கடிதம் எழுதினேன். துணை ஆணையர் ஜெயக்குமார் பணித்திறமை இல்லாதவர் என்பது குறித்து நான் ஏற்கெனவே அறிக்கை கொடுத்தேன். சென்னை மாநகரம் முழுவதும் ஏறக்குறைய 300 காவல்நிலையங்கள் இருக்கலாம். ஆனால், கமிஷனர் ஒருவர் மட்டும் சம்பந்தப்பட்டு இவ்வளவு பெரிய குற்றம் நடக்க வாய்ப்பிருக்க முடியுமா? இவ்வளவு பெரிய முறைகேடு யாருக்கும் தெரியாமல் நடந்திருக்குமா? நான் டிஜிபி-யாக வர இருந்த சமயத்தில், அதாவது கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், புதிய டிஜிபி தேர்ந்தெடுக்கப்பட இருந்த 3 நாள்களுக்கு முன்னர், குட்கா ஊழலில் எனது பெயரையும் இணைத்து தகவல்கள் பரப்பப்பட்டன.

Image result for முன்னாள் கமிஷனர் ஜார்ஜின்

சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியபோது நான் வீட்டில் இல்லை என சில ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அந்தத் தகவலில் உண்மை இல்லை. சிபிஐ அதிகாரிகளின் சோதனையின்போது நான் வீட்டில்தான் இருந்தேன். சோதனையின் முடிவில் எனது வீட்டில் சில ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். 19ந்ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தால் எனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுப் பத்திரம், சில ஒப்பந்தப் பத்திரங்கள் மற்றும் கார் இன்ஷூரன்ஸ் ஆவணங்கள் ஆகிய இவைகளை மட்டுமே சிபிஐ அதிகாரிகள்  எடுத்துச் சென்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment