நேபாளத்தில் 139 பயணிகளுடன் சேற்றில் போய் நின்ற போயிங் விமானம் !

நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையம் மலேசிய விமானம் ஓடுபாதையைத் தாண்டித் தரையில் நிறுத்தப்பட்டதை அடுத்து  சிறிது நேரம் மூடப்பட்டது. மலேசியாவின் மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737விமானம் நேற்றிரவு காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து 139பயணிகளுடன் கோலாலம்பூருக்குப் புறப்பட்டது.

ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருக்கும்போதே விமானத்தில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து விமானத்தை மேலேழுப்பாமல் ஓடுபாதையின் முடிவிலேயே நிறுத்த முயன்றனர்.

ஆனால் சற்றுத் தொலைவு புல்தரையில் ஓடிய விமானம் ஓடுபாதையில் இருந்து முப்பதுமீட்டர் தொலைவில் சேற்றில் போய் நின்றது. இதனால் காத்மண்டு திரிபுவன் விமான நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment