நெரிசல் இல்லாமல் அத்திவரதரை தரிசிக்க மாலை நேரம் வாருங்கள் – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் தரிசிக்க மாலை நேரம் வாருங்கள் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளியூர் மாற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவிலுக்கு வருகின்றனர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் அதிகமான கூட்ட  நெரிசல் காரணமாக ஒரே நாளில் 4 பேர் வரை உயிரிழந்தனர்.

இந்நிலையில், கோவிலில் பிற்பகலுக்கு பிறகு கூட்டம் குறைவாகவே காணப்படுவதால் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் மலை  நேரம் வந்தால் எந்த நெரிசலும் இன்று தரிசிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.