நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் மூலம் சசிகலாவிற்கு வீண் விளம்பரமா?சதி செய்தார்களா சசிகலா,தினகரன் அணி …!

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா மரணத்தில் இருப்பதாக சொல்லப்படும் சர்ச்சைக் குறித்து விசாரித்து வருகிறது. அதில், சசிகலா சார்பில், 55 பக்க பிரமாண வாக்குமூலப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, ஜெயலலிதா காதில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்குமாறு, மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனால், ஜெயலலிதா காதில், அக்கா. அக்கா. என நான் குறிப்பிட்டேன் என்று, சசிகலா வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பது போல செய்திகள் வெளியாகின.அதேபோல, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, அவரது விருப்பத்தின் பேரிலேயே நான்கு முறை விடியோ பதிவு எடுக்கப்பட்டது என்றும், சசிகலா குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.இவற்றை ஆறுமுகன் கமிஷன் மறுத்து விட்டது.

இந்த தகவல்களில் பெரும்பாலானவை, பிரமாண வாக்குமூலத்தில் இல்லாதவை என்றும், கூறியிருந்தது.சசிகலா தரப்பு ஏன் இப்படி தகவல்களை வெளியிட வேண்டும் என்று உளவுத்துறை போலீசார் விசாரித்தனர்.சசிகலாதான், ஜெயலலிதா இறப்புக்கு காரணமானார் என்ற இமேஜை எப்படியாவது உடைக்க வேண்டும் என, அவரது உறவினர்கள் சிலர் விரும்பினர். கணவர் நடராஜன் இறப்பால் ஏற்பட்டுள்ள பரிதாபத்தினூடே கூடுதல் பரிதாபம் ஏற்பட்டு, சசிகலா குற்றமற்றவர் என்ற இமேஜை உருவாக்கி விட்டால், அது அரசியல் ரீதியில், தினகரனுக்கு உதவும் என்று திட்டமிட்டே, பொய்யான தகவலை பரப்பி உள்ளனர்.ஆறுமுகசாமி கமிஷன் உடனடியாக மறுக்கவில்லை என்றால், மக்கள் மத்தியில் சசிகலா குற்றமற்றவர் என்ற எண்ணம் நிலைத்துவிடும், என உளவுத்துறை தகவல் அளிக்கவே, உடனடியாக, சசிகலா பிரமாண பத்திரம் குறித்து வெளியான தகவல்களை ஆறுமுகசாமி கமிஷன் மறுத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment