நீட் தேர்வு: நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் நீதிமன்றத்தில் எழுதிகொடுத்த சிபிஎஸ்இ…!

அடுத்தாண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான கேள்வி தாள்களை வழங்கியதோடு ,மட்டுமில்லாது தேர்வு அறைக்கு செல்ல உடை,அணிகலன் என பல கட்டுபாடுகளை விதித்தது சர்ச்சைக்குரிய செயலாகவும் இருந்தது.

மேலும் இது அடித்தட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் என பல எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் போராட்டம் நடத்தின.பல வழிகளில் எதிர்ப்புக்களையும் தெரிவித்தார்கள்.இதனால்(NEET) பாதிக்கப்பட்ட  மாணவி அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இப்படியான பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இயின் சார்பில் அடுத்தாண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment