நியமன எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஆலோசனை – புதுச்சேரி முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு….!!

புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், புதுவை சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது.
இது புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில், புதுச்சேரிஅரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து விவாதிக்கவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த முதலமைச்சர் நாராயணசாமி முடிவு செய்துள்ளார். அதன்படி, நாளை அனைத்துக் கட்சித் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment