நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட்..!!

புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவைகளின் பயன்பாட்டிற்காக 2 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் நிலப்பரப்பை ஆய்வு செய்யவும், புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவைகளின் பயன்பாட்டிற்காக இரண்டு செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை இரவு 10.07 மணிக்கு முதலாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. வணிக நோக்கத்துடன் இந்த இரண்டு செயற்கைகோள்களும் ஏவப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோவாசார் செயற்கைகோளானது காப்பு காடுகளின் அளவை கண்காணித்தல், புவி ஆய்வு, வெள்ளம் மற்றும் பேரிடர் கால கண்காணிப்பு, கப்பல், கடல்வழி போக்குவரத்தை கண்காணித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment