நம்பாதீங்க..நம்பாதீங்க…ஆன்லைன் விற்பனையை நம்பாதீங்க….அதிர்ச்சி தகவல்…!!

ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது
ஆனலைன் விற்பனையில்  ஒவ்வொரு ஐந்து பொருட்களுக்கும் ஒன்று போலியாக  உள்ளது என கூறப்படுகிறது  இதில் அதிக்மமானவை  ஒப்பனை மற்றும் வாசனை திரவியங்களுக்கான பொருட்கள் ஆகும்.
ஆன்லைன் விற்பனை தொடர்பாக லோக்கல் சர்க்கிள்  என்ற இணையதளம் சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆன் லைன் ஆய்வறிக்கை ஒன்றை  வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 6 மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருள்கள் தங்களிடம் விற்கப்பட்டதாக 20 சதவீத வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்தெந்த ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவில் போலி பொருட்களை விற்பனை செய்கின்றன என்ற கேள்விக்கு ஸ்னாப்டீல் என 37 சதவிகிதம் பேரும், பிளிப்கார்ட் என 22 சதவிகிதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். 20 சதவிகிதம் பேர் அமேசான் நிறுவனம் போலியான பொருட்களை விற்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நறுமண மற்றும் ஒப்பனை பொருட்கள் 35 சதவீதம்  போலியானவை என்றும் 22 சதவீதம் விளையாட்டுக்கு தேவையான பொருட்கள் என்றும், 5 சதவீதம்  பைகள் ஆகியவை தான் போலியானவையாக இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது போலியான பொருட்களை வழங்கும் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
dinasuvadu.com 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment