தோனி : இந்தியா பாகிஸ்தான் போட்டி பற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும்

இந்தியா பாகிஸ்தான் கிரிகெட் அணிகளுக்கு இடையேயான கிரிகெட் தொடருக்கு இந்திய அணி சார்பில் அனுமதி மறுக்கப்பட்டு இரு நாடுகளுக்கு இடையேயான கிரிகெட் போட்டிகள் நடத்த படாமல் உள்ளது. இரு நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து பாகிஸ்தான் பல முறை இந்திய கிரிகெட் அணிக்கு அழைப்பு விடுத்தும் இந்தியா மறுத்துள்ளது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் கிரிகெட் வாரியம், ‘இந்தியா விளையாட்டில் அரசியலை கலக்குகிறது. திட்டமிட்ட போட்டிகளுக்கு எந்தவித முன்னேற்பாடும் எடுக்காமல் இருப்பதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.’ எனவும் கூறிவருகிறது.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் ஏற்பாடு செய்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இந்திய கிரிகெட் அணியின் முன்னால் கேப்டன் மகிந்திரசிங் டோனி அங்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்களிடம் பேசினார். டோனி பேசுகையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்க முடியாது. விளையாட்டை தாண்டியும் பல விஷயம் உள்ளது. எனவே, இருநாடுகள் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறுவது தொடர்பாக அரசுதான் முடிவு எடுக்கவேண்டும் என்று கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment