தோனி,விராத் கோலி,சல்மான் கான்,ரன்பீர் கபூர் ஆகியோருக்கு சவால்!ரூ.70 லட்சம் மதிப்புள்ள காரில் குப்பை அள்ளிய டாக்டர்!உங்களால் முடியுமா?

பாலிவுட்டின் சீனியர் நடிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு  70 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசுக் காரில் குப்பை அள்ளிய இளம் மருத்துவர் ஒருவர்,தூய்மை இந்தியா இயக்கம் குறித்த சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

Image result for virat kohli DHONI

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரைச் சேர்ந்த அபினித் குப்தா என்ற இளைஞர், DC Avanti என்ற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் ரக கார் ஒன்றின் உரிமையாளராவார். இவர் அப்பகுதியில் பிரபலமான தோல் மருத்துவராக இருந்து வருகிறார். சாலையில் இவரின் கார் செல்லும்போது, அனைவரின் கண்களும் இவரின் கார் மீதே இருக்கும் வகையில் மிகவும் கவர்ச்சியான கார் மாடல் அவருடையது.

Image result for salman khan

கடந்த ஜூன் 10ஆம் தேதி இவர் தனது 70 லட்ச ரூபாய் மதிப்பிலான மஞ்சள் நிற DC Avanti காரில் நகர் முழுக்க வலம் வந்து அங்கு சாலையில் கிடந்த குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் இவரின் செயலை வினோதமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

https://twitter.com/drabhinitgupta/status/1005862371838038017

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் மீது அதிக ஈர்ப்புகொண்ட மருத்துவர் அபினித், தூய்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே தீவிரமாக ஏற்படுத்தவே தனது காரின் பின்பகுதியில் குப்பையை சேகரிக்கும் தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு காரில் சென்று குப்பைகளை அள்ளியதாக தெரிவித்துள்ளார். மேலும் குப்பை சேகரிக்கும் தொட்டி அமைப்பு முழுவதும் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை அவர் பொருத்தியிருந்தார்.

போபால் நகர மக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கையோடு, அதனை நாடு முழுவதும் மேற்கொள்ளும் முயற்சியாக தான் விலையுயர்ந்த காரில் குப்பை அள்ளும் வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள டாக்டர். அபினித், தன்னுடைய இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோமா என்ற தலைப்பில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Image result for ranbir kapoor

இதனை சவாலாக எடுத்துக்கொள்வோம் என்று அதில் கூறியுள்ள அபினித், விலையுயர்ந்த கார்கள், பைக்குகளின் உதவியுடன் நகரை தூய்மைப்படுத்துவோம் என்றார்.

பாலிவுட் நடிகர்களான சல்மான் கான்,  ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், மற்றும் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் விராத் கோலி ஆகியோரை தனது பதிவில் டேக் செய்துள்ள மருத்துவர் அபினித், உங்களுக்கு சவால் விடுப்பதாகவும் கூறியுள்ளார்.

அண்மையில் மத்திய அமைச்சரும், முன்னாள் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இதே போன்றதொரு ஃபிட்னஸ் சவாலை டிவிட்டரில் விடுத்தது, அது நாடு முழுவதும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment