தொடரை மீட்க போராடும் இந்தியா-கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா.! 2 வது ஒருநாள் போட்டி இன்று..!

  • இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
  •  தொடரை இழக்காமல் இருக்க முனைப்புடன் இந்தியாவும்- தொடரை கைப்பற்றி பாடம் கற்பிக்க ஆஸ்திரேலியாவும் இன்று பல பரீச்சை

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டி ல் இன்று இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோற்றதால் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காரணம் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றி இந்திய அணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இன்றைய போட்டியில் தன் முழு ஆட்டத்தை காட்ட ஆஸ்திரேலி களம் இறங்குகிறது.ஆகையால் இன்றைய போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது ரசிகர்களுக்கு தரமான போட்டியாக இன்றைய போட்டி அமையும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

Related image

கடந்த ஆட்டத்தில் இந்தியா அனியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மிகவும் கவலையளிகின்ற  வகையில் தான் சற்று மோசமாக இருந்தது.இதில் கேப்டன் கோலி 4வது வரிசையில் களம் இறங்கி பின்தங்கியது எந்தவித பலனையும் அணிக்கு தரவில்லை என்பதே நிதர்சனம்.இந்திய அணி பேட்டிங் வரிசையில் செய்த மாற்றம் அணிக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கோலி நினைவில் கொண்டு இன்று எப்போதும் போல 3வது வரிசையிலேயே ஆடுவார் என்று தெரிகிறது.

Related image

இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மாவும் -தவானும் தொடக்க வீரர்களாக  களமிரக்கப்பட்டு ஆடுவார்கள் என்று தெரிகிறது.அதே போல் ராகுல் 4வது வீரராக களம் இறங்க வாய்ப்பு உள்ளது. இன்றைய போட்டியில் காயம் காரணமாக ரி‌ஷப் பண்ட் விலகியதால் அவர் ஆட மாட்டார் எனவே ராகுலே விக்கெட் கீப்பராக செயல்படுவார் முதல் போட்டியில் இவரே விக்கெட் கீப்பிங் பணியை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த போட்டியில் பேட்டிங்க் இந்திய அணிக்கு  ஏமாற்றம் அளித்தால் இன்றைய போட்டியில் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்யப்படும் அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டால் ரி‌ஷப் பண்ட் இடத்தில் கேதர் ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டே ஆடதேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜடேஜா  ஒரு வேளை நீக்கப்பட்டால் ஷிவம் துபேக்கு வாய்ப்பு கிடைக்கும்.எப்படியாவது இன்றைய போட்டியில் வெற்றி காண வேண்டும் என்று கோலி வியூகம் வகுத்து களமிரங்குவார் இன்றைய ஆட்டத்தின் பார்வை எல்லாம் கோலியின் மீதே குறிவைக்கப்படும்.

Related image

அதே போல் கடந்த போட்டி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறிய முன்னனி பேட்ஸ்மேன்களான  ரோகித் சர்மா, கோலி , ஷிரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் என்று கிரிக்கெட் விமர்சிகர்கள் கூறுகின்றனர்.பந்து வீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஒரு விக்கெட்டை கூட இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்ற முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளித்தது மட்டுமல்லாமல் இந்திய பந்து வீச்சாளர்களின் பலத்தை பரிசோதித்தனர் என்று தான் கூற வேண்டும். ஆரோன் பிஞ்ச் மற்றும் வார்னர் அதிரடியாக ஆடி இந்திய பந்துவீச்சை நால பக்கமும் சிதறடித்து விட்டனர்.

Related image

இந்தியாவின் பலம் வாய்ந்த 3 வேகப்பந்து வீரர்களான முகமது ‌ஷமி, பும்ரா, ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் ரன்களை வாரி ஆஸ்திரேலியாவிற்கு கொடுத்தனர். இன்று  நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரர் தேவைப்பட்டால் சாஹல்க்கு வாய்ப்பு உண்டு.எதிர்பக்கம் விளையாடும் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தரமாகவும் சமபலத்துடன் நெஞ்சைக் காட்டி நிமிர்ந்து நிற்கிறது. முதல் போட்டியைப் போலவே இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது.அந்த அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், வார்னர் ,ஸ்டீவ் சுமித், லபுஷ்சேன், அலெக்ஸ் கேரி, டர்னர் போன்ற சிறந்த பேட்மேன்களும் உள்ளனர்.அதே போல் பந்து வீச்சிலும் அணி வலுவாக உள்ளது. வேகப்பந்து வீரர்களான ஸ்டார்க், கும்மின்ஸ், ரிச்சர்ட்சன் இந்திய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். சுழற்பந்தில் ஆடம் ‌ ஜம்பா, ஆஸ்டன் அகர் நேக்காக பந்துக்களை வீசக் கூடியவர்கள் எனவே இன்றைய போட்டி மிகவும் முக்கியமான ஆட்டமாக இரு அணிகளும் பார்க்கின்றனர்.பரபரப்பு நிறைந்த இந்த போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
kavitha