அதிரடி பலத்துடன் இறங்கிய ஆஸ்திரேலியா…ஆல்-அவுட் செய்து…இந்தியா..மிரட்டல் வெற்றி

  • இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி
  •  36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோற்றதால் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காரணம் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டது.வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றி இந்திய அணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இன்றைய போட்டியில் தன் முழு ஆட்டத்தை காட்ட ஆஸ்திரேலியாவும் களம் இறங்கிய நிலையில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது.இதனால் பேட்டிங்க் செய்ய களமிரங்கிற இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6  விக்கெட் இழப்பிற்கு 340 ரன்களை குவித்தது.

Image

இதனால் 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆஸ்திரேலியா களமிரங்கி விளையாடி வந்த நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சுகளை சமாளிக்க முடியாமல்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  304 ரன் கள் மட்டுமே எடுத்தது இதனால் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் 1-1 என்று தொடரை சமன் செய்துள்ளது இந்தியா.

author avatar
kavitha