தேசிய அளவில்முதலிடம்!நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் !

தேசிய அளவில்முதலிடம்!நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் !

இன்று  மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள்  வெளியானது.

நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து மாணவி  கல்பனா  தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.இவர்  இயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கும் 160 உயிரியல்,விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

மேலும்  ஓசி பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6 -ஆம் தேதி நடைபெற்றது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இந்தத் தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்.
தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் மே 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டன. மேலும் அந்தப் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை தெரிவிக்கும்படியும் அறிவிக்கப்பட்டது.

இதேபோல் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும்  நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கபட்டது. தற்போது  பிற்பகல் 2 மணியளவில் வெளியீடு என அறிவிக்கப்பட்ட நிலையில் முன் கூட்டியே வெளியானது.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை   என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *