தூத்துக்குடி:அமைதி திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான  போராட்டக்களமாக காட்சியளித்த தூத்துக்குடியில் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.

தூத்துக்குடியில் ஆட்சியர், எஸ்.பி. மற்றும் சிறப்பு அதிகாரிகள், வணிகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் வியாழக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பேரில் வ.உ.சி காய்கறிச் சந்தையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. ஒட்டன் சத்திரம் மற்றும் மதுரையிலிருந்து காயகறி ஏற்றிய லாரிகள் வந்து செல்லத் தொடங்கியதால், மற்ற நகரங்களைப் போன்ற இயல்பான விலையில் காய்கறிகள் விற்கப்பட்டன.

பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 50 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. அரசு மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

அண்ணா நகரில் 12 தெருக்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. திரேஸ்புரம், மட்டக்கடை, போல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ((gfx 1 out )) இதனிடையே தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment