துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆப்பு!வருமானத்திற்கு அதிகமாக சொத்து..!உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுகவின்  ஆர்.எஸ்.பாரதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து  சேர்த்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் மீது தொடர்ந்த வழக்கை கடந்த ஜூலை 17 ஆம் தேதி  உயர்நீதிமன்றம் விசாரித்தது.விசாரித்த பின்னர்   கொடுத்த புகாரை விசாரிக்க 3 மாதமாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று  மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.அதேபோல்  ஓ.பி.எஸ் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நடத்தாதது ஏன்? என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதேபோல் இன்றும் திமுகவின்  ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட  வழக்கு விசாரணைக்கு வந்தது.இதில் தமிழக அரசு சார்பில் பதில் மனு ஓன்று தாக்கல் செயயப்பட்டது.அந்த மனுவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில்  தகவல் தெரிவித்துள்ளது . இந்நிலையில்  உயர் நீதிமன்றம்  லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணையை விரைந்து முடிக்க  உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Leave a Comment