தீரன் பட இயக்குநருடன்….தேசிய விருது பெற்ற பட ரீமேக்கில் களமிரங்கும் அஜித்…!!!

விஸ்வாச படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித்தின் அடுத்த  படம் பற்றிய தகவல் உறுதியானது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குநர் எச்.வினோத்தின் அடுத்த படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான நடிகர் அமிதாப்பின் நடிப்பில் வெளியான பிங்க் பட ரீமேக்கில் நடிகர் அஜித் நடிக்க இருக்கிறார்.இந்த படம் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.படத்தை நாட்டின் முதல் குடிமகன் தொடங்கி அதாவது குடியரசுத் தலைவர் தொடங்கி பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் தமிழில் ரீமேக்காகும் இந்த படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். இந்த தகவலை ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூஷர் சூஜித் சிர்கார் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

Image result for ajith pinkமேலும் கூறிய அவர் அஜித் நடிக்கும் படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். மேலும் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.தீரன் பட இயக்குநரின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை அடுத்த வருடம் வெளியிட படக்குழு திட்டமிட்டி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த படக்குழு தொடர்பாக இன்னும் சில நாட்களில் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் உறுதி செய்வார் என்று சூஜித் சிர்கார் தெரிவித்துள்ளார்.மேலும் மற்றொரு தகவலாக இயக்குநர் சிவாவும் 5 வது முறையாக அஜித் களமிரங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment