திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம்!பிரதமர் நரேந்திர மோடி உட்பட 10 மாநில முதலமைச்சர்களுக்கு  கடிதம்….

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதி ஆணைய ஆய்வு வரம்புகளை திருத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி , மத்திய நிதி அமைச்சர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறும் மத்திய அரசு 5 ஆண்டுகள் மாநிலங்களின் சிறப்பான நிர்வாகத்துக்குத் தேவையான நிதி பகிர்வை பரிந்துரை செய்யும் மத்திய நிதி ஆணையத்திற்கு, ஆய்வு வரம்பை நிர்ணயிக்கும்போது ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் மாநிலங்களின் ஆலோசனையை கேட்கவில்லை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது கூட்டாட்சி தத்துவத்தை மீறுவது மட்டுமின்றி, சிறப்பாக செயல்படும் மாநிலத்தின் நிதி, சரியாக செயல்படாத மாநிலத்துக்கு கிடைக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.

எனவே, மாநில நிதி தன்னாட்சிக்கு எதிராக பாரபட்சமாக வகுக்கப்பட்டுள்ள மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், ஜிஎஸ்டி கவுன்சிலுடனும் கலந்தாலோசித்து திருத்தியமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் தமிழக முதலமைச்சர் உள்பட 10 மாநில முதலமைச்சர்களுக்கும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment