திடீரென்று மாயமான காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 3 பேர்?

கர்நாடகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த  நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களின் கூட்டம் பெங்களூரில் நேற்று  நடைபெற இருந்தது.காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 3 பேர் மாயமாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். இதேபோல, 78 இடங்களில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ், 38 இடங்களில் வெற்றிபெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆகியவையும் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

இந்நிலையில், பெங்களூரில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற எம்எல்ஏ.க்களின் கூட்டம் நேற்று  நடைபெற இருந்தது.

 

இதனிடையே 3 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாததோடு, அவர்களை மேலிடத்தால் தொடர்புகொள்ளவும் முடியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் தங்களுடன் இருப்பதாகவும், யாரும் மாயமாகிவிடவில்லை என்றும் சித்தராமையா கூறியுள்ளார். அதேசமயம், தங்கள் எம்எல்ஏ.க்களை இழுக்க பாஜக கடுமையாக முயற்சி செய்வதாக, காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

எனவே, எம்எல்ஏ.க்களை ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று பாதுகாக்க திட்டம் வகுத்துள்ளதாக கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதேபோல, மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தப்படுபவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment