தளபதி 64-இல் இணைந்த மற்றுமொரு கைதி பட நடிகர்!

  • தளபதி விஜய் நடிப்பில் அவரது 64வது படமாக உருவாகி வரும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
  • இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் என பலர் நடிக்கின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில் அடுத்து அவரது 64வது திரைப்படம் ‘தளபதி-64 என்கிற தலைப்புடன் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் தற்போது வேகவேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ப்ரியங்கா, 96 ஜானு, பவி டீச்சர், என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். கைதி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் இப்படத்திலும் நடிக்கிறார்.

மேலும் ஒரு கைதி நடிகராக தினேஷ் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார். கைதி படத்தில் கார்த்தியுடன் வரும் தினேஷின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்க வைத்தது. தற்பட்டது தளபதி 64யிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.