தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனின் கனா பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் சிவகாரத்திகேயன் தற்போது தமிழின் உச்ச நட்சத்திரத்தில் உள்ள  ஓர் நடிகர். தமிழ்நாட்டில் தல தளபதி படங்களுக்கு இணையாக ஓபனிங்கை தற்போது சிவகார்த்திகேயனும் பெற்றுள்ளார். அது  அண்மையில் வெளிவந்த  சீமராஜா பட  ஓபனிங்கை பார்த்தாலே தெரியும் .

இவர் அடுத்ததாக தயாரிப்பாளராக தனது அடுத்த சினிமா பயணத்தை தொடங்கி உள்ளார். தனது முதல் தயாரிப்பில் அவரது  நண்பர் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவை இயக்குனராக்கி உள்ளார். இப்படத்திற்க்கு கனா எனும் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் கதையாக இப்படம் அமைந்து வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் அகியோர் நடித்து வருகின்றனர். சிவகாரத்திகேயன் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படம் தற்போது ரெடியாகி வெளியீட்டிறக்கு வந்துவிட்டது. இப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது. இதனை படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. தேதி இன்னும் உறுதிபடுத்தபடவில்லை. Source : CINEBAR

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment