தமிழ்நாட்டில் சர்கார் புயலில் சிக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் படம்!

அமீர் கான் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான தங்கல் திரைப்படம் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி அடைந்தது. பெண்கள் குஸ்தியை மையபடுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அமீர் கான் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

இப்படம் ஹிந்தியில் ரிலீஸாகும் போதே தமிழ்நாட்டிலும் டப் செய்யபட்டு ரிலீஸானது. ஆனால் தீபாவளியன்று சர்கார் படம் ரிலீஸுனதால் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு தமிழகத்தில் இல்லாமல் போனது. இப்படம் தமிழ்நாட்டில் தங்கல் வசூலில் 30 சதவீதத்தை கூட தாண்டவில்லையாம். படம் தமிழ் நாட்டில் பெருத்த நஷ்டமாம். இப்படத்தில் அமீர்கான்-அமிதாபச்சன் ஆகியோர் சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: tamil.CINEBAR.IN

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment