தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதித்த விஜயேந்திர சுவாமி-விளக்கம் அளித்துள்ள சங்கரா மடம்

சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காத காஞ்சி விஜயேந்திர சுவாமிக்கு ஸ்டாலின், தமிழருவி மணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது, கவர்னர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தார். இதனால் அவர் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை செலுத்தாமல் அவமதித்தார் என்று கூறி ஸ்டாலின், தமிழருவி மணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இது குறித்து சங்கர மடம் விளக்கமளித்துள்ளது. அதில் அவர்கள், “தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்” என்றும், “கடவுள் வாழ்த்து பாடும்போது, சங்கராச்சாரியார்கள் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment