தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!தமிழக அரசு அரசானை வெளியீடு!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 5 ஆம் தேதி  2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் தயாரிப்பு விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்தது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழகத்தில் தடை விதித்தார்  முதலமைச்சர் பழனிசாமி .

இந்நிலையில்  தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment