தப்பினார் எடப்பாடி..பெருமூச்சு விட்ட அதிமுக…உச்சநீதிமன்றம் அதிரடி…!!

தமிழக முதல்வர் மீது டெண்டர் முறைகேடு வழக்கை CBI விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை உயர்நீதிமன்றம் CBI விசாரணை நடத்த உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து ரதமிழக அரசும் , லஞ்ச ஒழிப்புத்துறையும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையில் விசாரணைக்கு வந்தது.அப்போது இருதரப்பு வாதங்களையும்கேட்டறிந்த உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது CBI விசாரிக்க முடியாது என உத்தரவிட்டார்.அதுமட்டுமில்லாமல் தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் டெண்டரில் முறைகேடு இருந்தால் டெண்டரை ரத்து செய்யவேண்டும் என்று வழக்கு தொடராமல் முதல்வரை விசாரிக்க வேண்டுமென்று வழக்கு தொடர்வது எப்படி பொருத்தமாக இருக்கும் என்ற கேள்வியை முன்வைத்து வழக்கை இரத்து செய்தார்.இது குறித்து திமுக விளக்கமளிக்க வேண்டுமென்றும் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment