தனது ரசிகரை போன் போட்டு அழைத்து போட்டோ எடுத்துக்கொண்ட தல!

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக விஸ்வாசம் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தை வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தற்போதே எகிறியுள்ளது. படம் பொங்கலன்று திரைக்கு வரவுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தல அஜித் தன் குடும்பத்துடன் ஓய்வெடுக்க வெளியூர் சென்றுவிட்டார். அங்கு தல தன் மகளுடன் சைக்கிளிங் சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த ரசிகர் ஒருவர் தல என்று கூப்பிட்டுள்ளார். உடனே அஜித் அருகில் வந்து , நான் வெளியே குடும்பத்துடன் வந்துள்ளேன் எனக்கூறி ரசிகரின் போன் நம்பரை பெற்றுக்கொண்டு ஒரு மணி நேரம் களித்து, அவரே போனில் அழைத்து போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார். இதனை ரசிகர்கள்  வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

source : cinebar.in

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment