தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் படப்பிடிப்பு தளங்கள் குறித்த புதிய இணையதளம் உருவாக்க திட்டம்!

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் படப்பிடிப்பு தளங்கள் குறித்த புதிய இணையதளம் உருவாக்க திட்டம்!

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை,திரைப்பட படப்பிடிப்புத் தளங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய புதிய இணையத்தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்த ஏற்ற இடங்கள் குறித்த விவரங்கள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும். ரிக்கார்டிங், டப்பிங் உள்ளிட்ட படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளை மேற்கொள்ளும் வசதிகள், அவற்றுக்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் புதிய இணையத்தளம் வடிவமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வசதிகள் குறித்த விவரங்களை ஒரே இணையத்தளத்தில் வழங்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டிருப்பதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *