2 இன்ச் கேப்…தினமும் மனதைக் குடையும் அந்தக் கேள்வி.? தோனி வேதனை

  • உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் அணியில் நீண்ட ஒய்வில் இருக்கும் தோனி
  • உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நான் ஏன்.? டைவ்  அடிக்கவில்லை என்று மனம் திறந்து பேச்சு

 

கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடர் அரை இறுதி  ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணிக்கு, கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது அப்போது களத்தில் தோனி 49ஆவது ஓவரில் விளையாடிக்கொண்டிருந்த போது ரன் அவுட் ஆனார்.இதன் பின் ரன் எடுக்க முடியாமல் திணறிய இந்திய அணி இந்த போட்டியில் தோற்றது இதனால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது.அந்த நிகழ்வானது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு சம்பவமாக தான் இருந்தது இதன் பின்னர் கடுமையாக  தோனி விமர்சிக்கப்பட்டார்.

Related image

அணியின் தோல்விக்கு தோனி காரணம் என்று சிலர் வஞ்சனை செய்தனர்.இதற்கு பின்னர் இந்திய அணி பங்கு கொண்டு விளையாடி வரும் போட்டிகளில் தோனியை காண முடிய வில்லை காரணம் அவர் ஓய்வில் இருக்கிறார் என்கின்றனர் கிரிக்கெட் மட்டைகள். இந்நிலையில் உலகக்கோப்பை அரையிறுதி ரன் அவுட் குறித்து தற்போது தான் தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.  அவர் இது குறித்து பேசுகையில் எல்லைக்கோட்டை நெருங்கியபோது நான் டைவ் அடித்து ரன்னை எடுக்க ஓடியிருக்க வேண்டும் டைவ் அடிக்காமல் விட்டதற்காக தற்போது வரை வருந்து வதாகவும் உலகக்கோப்பை அரையிறுதியில் நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்; அந்த இரண்டு இஞ்ச் தூரத்தை நீ டைவ் அடித்திருக்க வேண்டுமென எனக்குள் நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என்று தோனி வேதனை வெளிப்பட பேசியுள்ளார்.

author avatar
kavitha