டி வில்லியர்ஸ் தாறு மாறு ஆட்டம்! பெங்களூர் அணி இமாலய இலக்கு!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி அற்புதமாக ஆடி 20 ஓவர்களின் முடிவில் 202 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணியின் துவக்க வீரர் பார்த்தீவ் படேல் 24 பந்துகளுக்கு 43 ரன்களும் ஏ பி டி வில்லியர்ஸ் 44 பந்துகளுக்கு  82 ரன்களும் மார்கஸ் ஸ்டோனிஸ் 34 பந்துகளில் 46 ரன்கள் விளாச 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 202 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

author avatar
Srimahath

Leave a Comment