டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம், படப்பிடிப்பு தொடங்கியது முதல் ரிலீஸ் வரை பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. அந்த எதிர்ப்புகளே படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற செய்தது. இந்த நிலையில் காலா தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி  650-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், அதே நேரத்தில் உலக அளவில் 2,500  திரையரங்குகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் தேவராஜன் என்பவர் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர்களில் கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி ஒரு வாரத்தில் தமிழக அரசு பதில் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்  காலா படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் கூடுதல் டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment