டாப் கியரில் ஆப்பிள் நிறுவனத்தை விரட்டிபிடிக்கும் அமேசான் நிறுவனம் …!

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்  ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்த படியாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்துள்ளது.
 அமெரிக்க நிறுவனமான அமேசான் இ-காமர்ஸ் சந்தையில் கொடி கட்டிப்பறக்கும் நிலையில் , கடந்த சில ஆண்டுகளாக கனிசமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அமேசான் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கடக்கும் என சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய பங்குச்சந்தை திறந்ததும் அந்நிறுவனத்தின் மதிப்பு எகிறிக்கொண்டே சென்றது.
ஒரு கட்டத்தில் அமேசான் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை எட்டியது. கடந்த 10 மாதங்களில் அந்த நிறுவனத்தின் மதிப்பு இரண்டு மடங்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 2-ம் தேதி ஆப்பிள் இந்த சாதனையை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை எட்டியது.

Leave a Comment