ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்துக்குள் நுழைந்திருக்க முடியுமா?ஜெயலலிதா இல்லாததால் பாஜக ஆட்டம்?

நேற்று விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பினர் ராமராஜ்யம் அமைக்க கோரி ரதயாத்திரை வந்தனர்.

உத்திரபிரதேசம் என தொடக்கி 6 மாநிலங்கள் வழியாக கேரளா கடந்து தமிழக எல்லைக்குள் வந்தது. ரதயாத்திரை அனுமதி அளிக்க கூடாது என பல்வேறு கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி கைது செய்ய பட்ட வேளையில் சட்ட மன்றத்தில் எதிர் கட்சிகள் கடும் புயலை கிளப்பினார்..

திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் வெளிநடப்பு செய்து மறியல் போராட்டம் செய்தனர்.திமுக செயல் தலைவர் முக. ஸ்டாலின் உட்பட அனைத்து சட்ட மன்ற  உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கபட்டனர்.பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாகி உள்ளது  ரத யாத்திரை.

இந்நிலையில்  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பிரிவினைவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிடும் வகையில் நடைபெற்று வரும் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்துக்குள் நுழைந்திருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

அத்வானியின் ரத யாத்திரை தமிழகத்துக்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவித்த திருநாவுக்கரசர், ஜெயலலிதா இல்லாததாலேயே பாஜனவினர் ஆட்டம் போடுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment