ஜி.வி.பிரகாஷ்குமாருக்காக இணையும் A.R.ரகுமான்! S.S.ராஜமௌலி!!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கியவரும் பிரபல ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஜி.வி.பிரகாஷ்ஷகுமாரை வைத்து சர்வம் தாளமயம் எனும் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் டிசம்பர் 28இல் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் திரைக்கு வருவதற்கு முன்னரே சீனாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும், திரைபிரபலங்களுக்கு பிரீமியர் காட்சி காட்டப்பட்டு பலரது பாராட்டுகளையும் அள்ளியது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்றுஜமாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. இதன் தமிழ் டீசரை ஏ.ஆர்.ரகுமானும், தெலுங்கு டீசரை எஸ்.எஸ்.ராஜமௌலியும் வெளியிட உள்ளனர்.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment