செவிலியர் பல்கலைக்கழகம் தமிழகத்தில் அமைப்பது குறித்து மத்திய அரசிடம் அனுமதி பெற்று தரத் தயார்! ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,தமிழகத்தில் செவிலியர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பரிந்துரைத்தால் மத்திய அரசிடம் அனுமதி பெற்று தரத் தயாராக இருப்பதாக  தெரிவித்துள்ளார். உலக செவிலியர்கள் தின தேசிய கருத்தரங்கு சென்னை கிண்டியில் நடைபெற்றது.

இதில் பேசியவர்கள் தமிழகத்தில் செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கருத்தரங்கில் பேசிய ஆளுநர் தமிழக அரசு செவிலியர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார்.

தமிழகம் மருத்துவ துறையின் மையமாகவும், மருத்துவ சுற்றுலாவுக்கு உகந்த இடமாகவும் விளங்குவதாகக் தெரிவித்த ஆளுநர், வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக மருத்துவர்களும், செவ்லியர்களும் சிறந்த சேவையாற்றி முத்திரை பதிப்பதாகக் கூறினார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் செவிலியர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் பேச இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment