சென்னையில் தயாரிக்கப்பட்ட ட்ரெயின் 18! 180 கி.மீ வேகத்தில் சென்று சாதனை!!

சென்னையில் முழுக்க முழுக்க இந்திய உபகரணங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ட்ரெயின் 18 என்கிற ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது. சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் 180 கிமீ வேகத்தில் சென்றது.
பயணிகள் செல்லும் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்த சென்னை ஐசிஏஃப்பில் இந்த ட்ரெயின் 18 தயாரிக்கப்பட்டு, பிறகு சென்னை – டெல்லி – ராஜதானி ரயில் ஓட்ட பாதையில் இந்த சோதனை ஓட்டம் நிக்காப்த்தி காண்பிக்கப்பட்டது. இந்த ரயில் ஆரம்பத்திலேயே 115 கிமீ வேகத்தில் சென்று பிறகு 180 கிமீ வேகமெடுத்து சென்றது.
மேலும்,ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டால்கோ என்கிற ரயில் சென்ற வருடம் இதேபோல சோதனை ஓட்டத்தில் 180 கிமீ வேகத்தில் சென்றது. இந்தாண்டு முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ட்ரெயின் 18 ஆனது, 180 கிமீ வேகத்தில் சென்றுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் செல்லும் ரயில்களை போல இதில் தனியாக எஞ்சினை பொறுத்த தேவை இல்லை.மாறாக ரயில் பெட்டிகளின் அச்சில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு, சக்கரங்களுக்கு நகர்வு உந்துசக்தி நேரடியாக கொடுக்கப்படுகிறது. இதனால், இந்த ரயில் மிக விரைவாக வேகமெடுக்கும். அதேபோன்று, மிக விரைவாக வேகத்தை குறைக்கவும் செய்யும்.
புல்லட் ரயில் போல காற்றினை கிழித்து செல்லும் படி இதன் முகப்பு வடிவமைக்க பட்டுள்ளது. இதன் இருபுறமும் ஓட்டுநர் பகுதி அமைந்துள்ளதால் இதனை இரண்டு பக்கம் மூலமாகவும் இயக்கிக்கொள்ளலாம். இதனால் பயணிகளுக்கு 15 சதவீத நேரத்தை மிச்சப்படுத்த முடியும். இந்த ரயில் 180 கிமீ வேகத்தில் சோதனை ஓட்டத்தின் போது ஓடினாலும், நமது அரசாங்கம் அதனை 160 கிமீ வேகம் வரை மட்டுமே செல்ல அனுமதிக்கும்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment