சுவையான சுர்ரோஸ் செய்வது எப்படி ?

  • சுவையான சுர்ரோஸ் செய்வது எப்படி ?

நமது அன்றாட வாழ்வில் உணவு ஒரு முக்கியமான இடத்தை பெறுகிறது. நாள்தோறும் புது புது உணவு வகைகளை நாம் செய்து சாப்பிட்டு வருகிறோம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான சுர்ரோஸ் செய்வது எப்படி என்று பாப்போம்.

Image result for சுர்ரோஸ்

தேவையானவை

  • தண்ணீர் – 200 மி.லி.
  • வெண்ணெய் – 80 கி.
  • உப்பு  – ஒரு தேக்கரண்டி
  • மாவு – 125 கி.
  • முட்டைகள் – 3
  • எண்ணெய் – 200 மி.லி.
  • கேஸ்டர் சர்க்கரை – 100 கி.
  • பட்டைத்தூள் – 1 தேக்கரண்டி
  • கிரீம் – 3 மேசைக்கரண்டி
  • டார்க் சமையல் சாக்லேட் – 100 கி.

செய்முறை

ஒரு சிறிய வாணலியில் மிதமான சூட்டில் தண்ணீர், வெண்ணெய், உப்பைக் கலக்கவும். கொதிக்க வைத்து, சூட்டிலிருந்து இறக்க வேண்டும். மாவை சேர்த்து வேகமாகக் கலக்க வேண்டும். குமிழிகள் இல்லாமல் ஆகும் வரை மர ஸ்பூனால் அதை கலக்க வேண்டும். முட்டைகளை ஒரே நேரத்தில் சேர்த்து, நன்றாக மர ஸ்பூனால் அடிக்க வேண்டும். மாவு மென்மையாகவும் பளப்பளப்பாகவும் இருக்க வேண்டும். இழுத்து விடுவித்தால் வடிவம் மாறாமல் இருக்க வேண்டும். இதை 30 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.

Related image

பின், எண்ணெயை 190மு செல்சியஸுக்கு டீப் ஃபிரையரில் சூடாக்க வேண்டும். மாவை ஒரு பேஸ்ட்ரி பையில் வைத்து, ஸ்டார் துளையின் மூலம் மாவை சூடான எண்ணெயில் விட வேண்டும். பொன்னிறமாக மொறுமொறுவென்று ஆகும் வரை வறுக்க வேண்டும். கூடுதல் எண்ணெயை வடித்து விட வேண்டும்.

அதன் பின், கேஸ்டர் சர்க்கரை, லவங்கப் பட்டை பவுடரை சேர்த்து, அதில் சுர்ரோஸை உருட்ட வேண்டும். சாஸ் செய்ய, மிதமான சூட்டில் உள்ள வாணலியில் கிரீமை போட வேண்டும். வாணலியை சூட்டிலிருந்து எடுத்து, சாக்லேட்டை சேர்க்க வேண்டும். அது மென்மையாகவும் சாஸ் போன்றும் ஆகும் வரை கலக்க வேண்டும். சூடான சுர்ரோஸ் உடன் பரிமாற வேண்டும். இப்பொது சுவையான சுர்ரோஸ் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment